Published : 08 Sep 2018 05:25 PM
Last Updated : 08 Sep 2018 05:25 PM

மீண்டும் விஷாலுடன் ஜோடிசேரும் தமன்னா

விஷாலுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார் தமன்னா.

சுராஜ் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கத்தி சண்டை’. விஷால் - தமன்னா இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்தனர். முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. இந்தப் படத்தை, சுந்தர்.சி இயக்குகிறார். தற்போது ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தை, சிம்புவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர்.சி.

மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படம் முடிந்தபிறகு விஷால் - தமன்னா படத்தைத் தொடங்க இருக்கிறார் சுந்தர்.சி.

தமன்னா நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அத்துடன், தென்னிந்திய மொழிகள் நான்கிலும் உருவாகும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x