Published : 20 Sep 2018 12:28 PM
Last Updated : 20 Sep 2018 12:28 PM
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள படம், சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தயாராகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஒன் ஹார்ட்’. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், கச்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்குத் தேர்வாகியிருக்கிறது.
படம், இசை மற்றும் நடனத்திற்கான சர்வதேச முதல் திரைப்பட விழா இதுதான். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது. உலகமெங்கும் இருந்து கலந்துகொண்ட திரைப்படங்களில், 22 படங்கள் இந்த விழாவிற்குத் தேர்வாகியுள்ளன.
அதில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் ‘ஒன் ஹார்ட்’. ஜூரி விருது, பார்வையாளர்கள் விருது, ரசிகர்கள் விருது என மொத்தம் மூன்று விதமான விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கடந்த 5-ம் தேதி ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. வருகிற 24-ம் தேதி ‘சர்கார்’ படத்தின் முதல் பாடலும், அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி மொத்தப் பாடல்களும் வெளியிடப்பட இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT