Published : 14 Sep 2018 03:27 PM
Last Updated : 14 Sep 2018 03:27 PM

விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் ‘வால்டர்’

விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்துக்கு ‘வால்டர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கழுகு 2’. சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தை, மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வேலன் தயாரிக்கிறார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

‘கழுகு 2’ படத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘வால்டர்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார் சிங்கார வேலன். விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இந்தப் படத்தில் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதை கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யு.அன்பரசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.

‘வால்டர்’ படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். விரைவில் சென்னையில் தொடங்கும் இதன் படப்பிடிப்பு, மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x