Published : 13 Sep 2018 02:55 PM
Last Updated : 13 Sep 2018 02:55 PM

பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படங்களைக் கைப்பற்றிய சன் டிவி

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள 'பார்ட்டி', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என இப்படத்தில் நட்சத்திரப் படையே நடித்துள்ளது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

'சார்லி சாப்ளின்' படத்தைத் தொடர்ந்து, 'சார்லி சாப்ளின் 2' என்ற பெயரில் படமொன்றை இயக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கிரேஸி மோகன் வசனம் எழுத, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.

இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படங்களின் தொலைகாட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதனால் 'பார்ட்டி', 'சார்லி சாப்ளின் 2' படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x