Published : 12 Jun 2019 10:12 AM
Last Updated : 12 Jun 2019 10:12 AM

நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆதரவு குறித்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்: நடிகர் விஷால் வேண்டுகோள்

நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினி, கமல் ஆகியோர் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை நடிகர் சங்க பொதுக் குழுவின் அனுமதி பெறாமல் விற்பனை செய்துவிட்டதாக நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதா ரவி உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவில் நடிகர் சங்கச் பொதுச்செயலர் விஷால் புகார் தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் மெத்தனம் காட்டுவதாகவும், முறையான விசாரணை நடத்தக் கோரியும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த விசாரணைக்கு தேவை யான உரிய ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்யும்படி நடிகர் விஷாலுக்கு போலீஸர் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மன் தொடர்பாக நடிகர் விஷால் நேற்று ஆஜராகி, தனது வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீ ஸாரிடம் தாக்கல் செய்தார். அப்போது டிஎஸ்பி தென்னரசு தலைமையிலான போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை முடிந்து வெளியில் வந்த நடிகர் விஷாலி டம் ‘வரப்போகிற நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணியை ரஜினிகாந்தும், நீங்கள் சார்ந் திருக்கிற அணியை கமல்ஹாசனும் ஆதரிக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறதே...’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஷால், ’ரஜனிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். எப்போது தேர்தல் நடந்தாலும் எதிர் அணி என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். நாங்கள் எங்கள் காலகட்டத்தில் என்னென்ன செய்துள்ளோம் என் பதை நடிகர்களிடம் சொல்லித்தான் வாக்கு கேட்கப் போகிறோம். எல்லா துறைகள் போலவே திரைத் துறையிலும் வெற்றியும் தோல்வி களும் உண்டு.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு இடை யூறு வந்து அமைந்துவிடுகிறது. அதை நீதிமன்றம் மூலம் சரிசெய்து நாங்கள் அந்தக் கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நடிகர் சங்க கட்டிடடம் கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழா சிறப்புடன் நடைபெறும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x