Last Updated : 27 Jun, 2019 07:41 AM

 

Published : 27 Jun 2019 07:41 AM
Last Updated : 27 Jun 2019 07:41 AM

தண்ணீரை நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை!- நேர்காணல் : லஷ்மி ராமகிருஷ்ணன்

மழை பெய்துகொண்டே இருக்கும். இல்லன்னா மழை வரப்போகிற சூழ்நிலை நிலவும். அல்லது மழை பெய்து ஓய்ந்த நேரமாக இருக்கும். இந்த மூன்று காலநிலை இந்தப் படம் முழுக்க பிரதிபலிக்கும். இப்படி முழுக்க தண்ணீர் சூழ்ந்த களத்தில் உருவானதுதான் ‘ஹவுஸ் ஓனர்’ படம்’’ என்கிறார் இப்படத்தின் இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன்.

கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்ட சிலரை கொண்டு உருவானதே ‘ஹவுஸ் ஓனர்’. இப்படம் பற்றி லஷ்மி ராம கிருஷ்ணனோடு உரையாடியபோது:

இப்படத்துக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதாமே? தற்போதைய வறட்சி சூழலில் தண்ணீர் மீதான அலட்சியம் இல்லையா இது? ஈசிஆரில் நடிகை விஜி சந்திரசேகர் ஃபார்ம் ஹவுஸில் செட் போட்டு இக்காட்சியைப் படம்பிடித்தோம். இந்தப் படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் சுழல்கிற களம்.

மழை, வெள்ளம் என்பதால் படப் பிடிப்புக்கு தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. தண்ணீரின் தேவையை நாம் எல்லோரும் உணர வேண்டிய இன்றைய தருணத்தில் தண்ணீரை எப்படி வீணாக்க முடியும்? தண்ணீரை நாங்கள் அலட்சியமாக கருதவில்லை. படப்பிடிப்புக்குப் பயன்படுத்திய நீரை வீணாக்காமல் திரும்பவும் கிணறுக்குள் கொண்டு சென்றோம்.

இந்தப் படத்தில் கிஷோர், லவ்லின் சந்திரசேகரின் பங்களிப்பு என்ன?

‘ஆரோகணம்’, ‘அம்மணி’ போன்ற படங்கள் என்னை பாதித்த சம்பவங் களின் கோர்வையாக இருந்தன. இப்படம் அப்படி இல்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடைய வாழ்க் கையில் நடந்த சுவாரஸ்ய சம் பவங்கள் இதில் உண்டு. கிஷோர், நடிப்பு பரம்பரையில் இருந்து வந்த வர் அல்ல; அதனால் நடிகராக நடிக் கத் தெரியாது. எதார்த்தம், இயல்பு என்னவோ அதைத்தான் வெளிப் படுத்துவார்.

இப்படத்திலும் அதைத்தான் கிஷோர் செய்திருக்கிறார். அதே மாதிரி விஜி சந்திரசேகர் மகள் லவ் லின் அவ்வளவு அபாரமான திறமை சாலி. அவரை ஆடிஷனுக்கு வர வழைத்தபோதே முடிவு செய்தேன். இவர்தான் இந்த கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று. இதெல்லாம் சரியாக இருந்ததால் படமும் சரியாக வந்துள்ளது.

திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப் படுவது போலவே உங்கள் படங்கள் இருக்கும். இப்படத்தை ஏன் அனுப்ப வில்லை?

‘அம்மணி’ படம் வந்தபோது சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முயற்சித்தேன். பைரசி பிரச் சினையால் தயாரிப்பாளர் அப்போது திரையிட வேண்டாம் என விட்டு விட்டார். அப்போதுகூட நான், ‘நாம் என்ன ரஜினி, விஜய், அஜித் படங்களா எடுத்திருக்கோம். இதை அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை.

நான் எப்போதுமே என் படங்களை சில முக்கிய நபர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பேன். அந்த வரிசையில் இம்முறை 80 சதவீதம் படம் முடிந் ததும் வெற்றிமாறனை அழைத்து காட்டினேன். அவரோ, ‘கண்டிப்பாக இப்போது ரிலீஸை நிறுத்திவிட்டு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் வேலைகளைப் பாருங்கள். நானும் அதுக்கு உதவியா இருக்கேன்!’ என்று சொன்னார். படத்தின் தயாரிப் பாளர் என் கணவர்தான். ஆனால், அவர் தயாராக இல்லை. ஒரு படம் திரைப்பட விழாக்களுக்கு போகும் போது அதுகூடவே நாமும் பயணித் தாக வேண்டும்.

நாங்கள் விரைவில் அமெரிக்காவில் இருக்கும் எங்கள் மகள் வீட்டுக்கு முக்கிய வேலையாகப் போக வேண்டும். அதனால் இப்போது தியேட் டரில் ரிலீஸ் செய்துவிடுவோம் என முடிவெடுத்தோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x