Published : 06 Mar 2018 12:34 PM
Last Updated : 06 Mar 2018 12:34 PM

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் பிரபுதேவா?

அஜித்தின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விஜய், அசின் நடித்த ‘போக்கிரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா. பிறகு ‘வில்லு’, ‘எங்கேயும் காதல்’, ‘வெடி’ ஆகிய படங்களை இயக்கினார். பின்னர், பாலிவுட்டில் படங்களை இயக்கிய பிரபுதேவா, நடிப்பிலும் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில், மீண்டும் தமிழில் அவர் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் நடிக்கப் போவது அஜித் என்கிறார்கள். அஜித்திடம் கதையின் ஒன்லைனைச் சொல்லிவிட்டாராம் பிரபுதேவா. இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பது, நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷ்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அது முடிந்தபிறகு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். இதுதவிர, ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரியும் அஜித்திடம் ஒன்லைன் சொல்லிக் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x