Published : 26 May 2019 08:33 AM
Last Updated : 26 May 2019 08:33 AM

விஞ்ஞானியின் ஃபார்முலா

பிரசன்னா நடிக்க, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘திரவம்’ வெப் சீரீஸ். இதுபற்றி அதன் இணை இயக்குநர் எஸ்.கலீல்ராஜா கூறியதாவது:

பெட்ரோலுக்கு இணையாக, ஆனால் மலிவுவிலையில்  எரிபொருள் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி பிரசன்னா.  மெக்சிகோ மாஃபியா, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவன கும்பல், ஓர் அரசியல் கட்சி தலைவர் ஆகிய 3 குழுவும் இந்த ஃபார்முலாவை குறிவைக்கின்றனர்.

இது ராமர்பிள்ளை கதையோ என்று பலரும் நினைக்கின்றனர். அதுபோல ஒரு விஞ்ஞானி இருந்தால், அவரது கண்டுபிடிப்பை அபகரிக்க எப்படி முயற்சிகள் நடக்கும் என்பதே இதன் களம்.

சினிமாவில் கடைசி 10 நிமிடத்தில்கூட ரசிகர்களை திருப்திப்படுத்தும் காட்சியை வைக்க முடியும். வெப் சீரீஸில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு செல்லமாட்டார்கள்.

அரவிந்த் கிருஷ்ணாவுடன் இணைந்து ஏற்கெனவே விளம்பரப் படங்களில் பணியாற்றி உள்ளேன். அதேபோல, இதுவும் புதுமையான அனுபவமாக இருந்தது. 22 நாட்களில் 8 அத்தியாயங்களையும் படமாக்கினோம். பிரசன்னா, இந்துஜா, ஜான் விஜய், அழகம்பெருமாள், ஸ்வயம் சித்தா உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x