Published : 30 May 2019 12:32 PM
Last Updated : 30 May 2019 12:32 PM

காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி: பார்த்திபன்

‘ஒத்த செருப்பு’ ட்ரெய்லரை வாழ்த்திய ஆர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. புதுமையாக பார்த்திபன் ஒருவர் மட்டுமே இந்தப் படத்தில் நடித்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரை, கடந்த 27-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் கார்த்தி. அதை ரீட்வீட் செய்த ஆர்யா, “இதுவொரு மிகச்சிறந்த படம் பார்த்திபன் சார். நீங்கள் எப்போதுமே வித்தியாசமாகவும், மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் சிந்திக்கிறீர்கள்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள பார்த்திபன், “யாருய்யா? இந்தக் காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது? தன்னலமற்ற ரசிகர்களைத் தவிர, யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x