Published : 09 Dec 2018 07:33 PM
Last Updated : 09 Dec 2018 07:33 PM

அமிதாப் மாதிரி நடிச்சிட்டே இருக்கணும் ரஜினி சார்; - ரஜினிக்கு இயக்குநர் சசிகுமார் வேண்டுகோள்

ரஜினி சாருக்கு ஒரேயொரு வேண்டுகோள். ரஜினி சார்… நீங்க நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்கணும் சார். அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும் என்று ஆடியோ விழாவில், இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசினார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசியதாவது:

ரஜினி சாரோட படத்தையெல்லாம் முதல் நாள், முதல் ஷோ பார்த்த அவரோட ரசிகன் நான். அவரை அண்ணாந்து பார்த்தவன். அவ்ளோ உயரத்துல இருக்கற சூப்பர் ஸ்டாரோட நானும் நடிச்சிருக்கேன்னு நினைக்கும் போதே பெருமையா இருக்கு.

ரஜினி சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் எல்லாருக்கும் நன்றி. படம் நினைச்சதை விட சீக்கிரமே முடிஞ்சிருச்சு. ரஜினி சாரே பாத்துக்கிட்டே இருக்கலாம். அவரைப் பாக்கப் பாக்க ஒரு எனர்ஜி வந்துரும் நமக்கு. இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாமேனு தோணுச்சு.

ரஜினி சார், ரொம்ப தோழமையா பழகினார். ரொம்ப ரொம்ப எளிமையா, சாதாரணமா பழகினார். அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார், கேரவனுக்குள்ளே போய் ரெஸ்ட் எடுக்காம, டிரஸ் மாத்தக்கூட போகாம, அவ்ளோ எளிமையா, சகஜமா இருந்தார். ஆச்சரியமா இருந்துச்சு.

என்னோட டிரஸ் மாத்தறதுக்கு கேரவனுக்கு கூப்பிட்டப்போ, அவரு யாரு? எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார். அவரை ஒலகத்துக்கே தெரியும். நம்மளை உள்ளூர்லதான் தெரியும்னு சொன்னேன்.

எனக்கு டான்ஸ் வராதுன்னு ரஜினி சார் சொன்னார். ஆனா அது உண்மையில்ல. அவ்ளோ ஸ்டைலா ஆடினார். 4 மணிக்கு ஷூட்டிங். ரெண்டரைக்கே வந்துட்டாரு. இத்தனைக்கும் மலைல  அந்தப் பாட்டு ஷூட்டிங் நடந்துச்சு. கொஞ்சம் கூட முகம் சுளிக்காம ஆடிட்டுப் போனார் ரஜினி சார்.

அதுமட்டுமில்ல. அவரோட பழைய கதைகளையெல்லாம் சொன்னப்ப பிரமிப்பா இருந்துச்சு. சும்மா இந்த உயரத்துக்கு வந்துடலை. வரவும் முடியாது. அவ்ளோ உழைப்பு. ஈடுபாடு. அது இருந்ததாலதான் அவர் இன்னிக்கி சூப்பர் ஸ்டாரா இருக்கார்.

உண்மைய சொல்லணும்னா, ரஜினி சாரோட ஸ்டைலான ஆட்டத்தைப் பாத்துதான், நாங்க அதை பாலோ பண்ணி, ஆடிட்டிருக்கோம்.

பேட்ட அருமையா வந்திருக்கு. பிரமாதமா எல்லாரும் ரசிக்கும்படி அமைஞ்சிருக்கு. ஒரு ரசிகர் ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தா எப்படியிருக்கும்? கார்த்திக் சுப்பராஜ் அப்படித்தான் எடுத்திருக்கார்.

ரஜினி சாருக்கு ஒரேயொரு வேண்டுகோள். ரஜினி சார்… நீங்க நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்கணும் சார். அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இவ்வாறு சசிகுமார் பேசினார்.

தளபதி படத்தில் நட்புன்னா என்னன்னு தெரியுமா, நண்பன்னா என்னன்னு தெரியுமா, சூர்யான்னா தெரியுமா என்கிற வசனத்தைப் பேசிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x