Published : 09 Dec 2018 09:36 PM
Last Updated : 09 Dec 2018 09:36 PM

ரஜினிக்கு நண்பனா? வில்லனா?- ரகசியம் உடைத்த விஜய் சேதுபதி

இந்தப் படத்துல நான் ரஜினி சாருக்கு நண்பனா, வில்லனான்னு கேக்கறீங்க. இவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லனா நடிச்சாத்தான் ஹிஸ்டரில நம்ம பேரும் இடம் பிடிக்கும். அதனால வில்லனாத்தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி பேசினார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

''ரஜினி சார், எதுக்கெடுத்தாலும் ஆண்டவன் ஆண்டவன்னு மேலே கையைக் காண்பிப்பார். ஸ்கிரிப்டுக்குள்ளே ரஜினி சார் வந்து அழகா உக்கார்ந்துக்கறார். அவ்ளோ முழு ஈடுபாட்டோட என்கரேஜ் பண்ணி நடிச்சுக் கொடுக்கறாரு. என்னைப் பொறுத்தவரை, அந்த ஆண்டவனே ரஜினி சாரோட டெடிகேஷனைப் பாத்து வந்து, ரசிச்சு கைத்தட்டிட்டுப் போவான்.

நேத்து வந்தவன் நான். எனக்கே சில சமயங்கள்ல இது போதும்னு நினைப்பு வருது. ஆனா இத்தனை படங்கள் பண்ணியும் கூட, இவ்ளோ உயரம் வந்த பிறகும் கூட, ஒவ்வொரு சீன்லயும் அத்தனை அட்டாச்மென்ட்டோட நடிக்கிறார் ரஜினி சார். இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.  ரஜினி சார் செய்றதெல்லாம் பெரிய ஒர்க்.

ரஜினி சார், கேமராவுக்கு முன்னாடி நிக்கும் போது, நான் கேமராவுக்கு முன்னாடி நிக்கல. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னாடி நிக்கிறதா நினைச்சுக்கறேன்னு சொன்னார். அவ்ளோ ரெஸ்பெக்டோட நடிக்கிறாரு. எனக்கும் இந்த ரெஸ்பான்ஸிபிலிட்டி வரணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

இந்தப் படத்துல நான் ரஜினி சாருக்கு நண்பனா, வில்லனான்னு கேக்கறீங்க. இவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லனா நடிச்சாத்தான் ஹிஸ்டரில நம்ம பேரும் இடம் பிடிக்கும். அதனால வில்லனாத்தான் நடிக்கிறேன்''.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x