Published : 28 Nov 2018 12:45 PM
Last Updated : 28 Nov 2018 12:45 PM

‘2.0’ படத்துக்காக சண்டைப் பயிற்சி எடுத்த எமி ஜாக்சன்: வைரலாகும் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தியளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், நாளை (நவம்பர் 29) வெளியாகிறது.  இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். படத்துக்கான புரமோஷன் வேலைகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘2.0’ படத்துக்காக சண்டைப் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

“2.0 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, சிறந்த சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் சென்னைக்கு வந்து சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி தந்தனர். எங்கள் முதல் பயிற்சியின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. எனது தவறுகள் என்னெனன என்பதைப் பார்த்து திருத்திக் கொள்ள ஸ்லோமோஷனில் படம்பிடித்தோம்” எனத் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x