Published : 08 Oct 2018 05:36 PM
Last Updated : 08 Oct 2018 05:36 PM

தொண்டையில் ‘கிச்...கிச்...’: விக்ஸ் உதவியுடன் ‘சர்கார்’ டப்பிங்கில் வரலட்சுமி

தொண்டை சரியில்லாதபோதும், விக்ஸ் உதவியுடன் ‘சர்கார்’ படத்துக்காக டப்பிங் பேசியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

கடந்த 2-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல இசை நிறுவனமான சோனி மியூஸிக், இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், படத்தைப் பற்றிய முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கிலும் விஜய்க்கு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே, ‘சர்கார்’ படத்தைத் தெலுங்கிலும் வெளியிடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை மற்றும் தெலுங்கு வெர்ஷன் பாடல்கள் உருவாக்குவதில் தற்போது பிஸியாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தெலுங்கு வெர்ஷன் பாடல்களை, சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமாலை இருவரும் எழுதியுள்ளனர். தெலுங்கிலும் தீபாவளி விடுமுறையில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்காகத் தெலுங்கில் டப்பிங் பேசிய தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

இத்தனைக்கும் வரலட்சுமிக்கு தொண்டை சரியில்லை. விக்ஸ் உதவியுடன் டப்பிங் பேசியதாகவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ட்வீட்டுக்குக் கீழே, “உங்க வாய்ஸ் உங்களுக்கு ஒரு தனி ப்ளஸ் அக்கா. வலிமையாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. உங்கள் குரலை எப்போதெல்லாம் கேட்கிறேனோ, அப்போதெல்லாம் எனக்குக் கூடுதல் உற்சாகம் கிடைக்கும்” என சந்தியா ரத்தினவேலு என்பவர் தெரிவித்துள்ளார்.

— varu sarathkumar (@varusarath) October 8, 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x