Published : 24 Aug 2018 02:31 PM
Last Updated : 24 Aug 2018 02:31 PM

சமந்தாவுக்காக இசையமைத்துப் பாடும் அனிருத்

நயன்தாராவைத் தொடர்ந்து சமந்தாவுக்காகவும் ஒரு பாடலுக்கு இசையமைத்துப் பாடுகிறார் அனிருத்.

திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, தனி ஆல்பமாகவும் பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். குறிப்பாக, சில படங்களுக்காக அவர் இசையமைத்த புரமோஷன் பாடல்கள், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

சமீபத்தில் கூட ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக ‘Gun in Kadhal’ என்ற புரமோஷன் பாடலை இசையமைத்து, பாடினார் அனிருத். மேலும், அந்தப் பாடலில் நடிக்கவும் செய்தார். விக்னேஷ் சிவன் அந்தப் பாடலை எழுதியதோடு, அந்தப் பாடலை இயக்கவும் செய்தார்.

இந்நிலையில், சமந்தா நடித்துள்ள ‘யு-டர்ன்’ படத்துக்காகவும் ஒரு புரமோஷன் பாடலை இசையமைத்துப் பாட இருக்கிறார் அனிருத். ஆனால், இந்தப் பாடலில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பவன் குமார் இயக்கியுள்ள ‘யு-டர்ன்’ படத்தில் ஆதி பின்னிசெட்டி, ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x