Published : 15 May 2018 04:58 PM
Last Updated : 15 May 2018 04:58 PM

ஆட்டோ டிரைவராக நடிக்கும் சாய் பல்லவி

பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி 2’ படத்தில், ஆட்டோ டிரைவர் வேடத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. 2015-ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, ‘கல்லூரி’ வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடங்கியபோதே இந்தப் படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

வேலை நிறுத்ததுக்குப் பின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறார் சாய் பல்லவி என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x