Published : 09 Jun 2024 10:36 AM
Last Updated : 09 Jun 2024 10:36 AM

அஜர்பைஜானில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு

நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. அங்கு 2 சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து வரும் 20-ம் தேதி ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்குகிறது. இதற்காக இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் 15-ம் தேதி அங்கு செல்கின்றனர். அஜித் பின்னர் செல்வார் என்று தெரிகிறது. ‘ ‘விடாமுயற்சி’யில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x