Published : 30 Apr 2018 01:14 PM
Last Updated : 30 Apr 2018 01:14 PM

‘காலா’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது!

‘காலா’ படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியிடப்படும் என தனுஷ் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், ஜூலை மாதம் ரிலீஸாகவிருந்த ‘காலா’, ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால், ‘காலா’வின் ரிலீஸ் ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் படத்தைப் பார்க்கலாம் எனக் காத்திருந்த ரஜினி ரசிகர்கள், ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். படத்தின் டிராக் லிஸ்ட் அல்லது ஒரு பாடலாவது வெளியிடுங்கள் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு முதல் பாடல் ரிலீஸாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். ‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் பாடல் தான் முதன்முதலாக ரிலீஸாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாடல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x