Published : 05 Apr 2018 10:33 AM
Last Updated : 05 Apr 2018 10:33 AM
பொன்ராம் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘சீமராஜா’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய தீவிரமான முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளன.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்ட நாட்களை முழுமையான கதை உருவாக்கும் பணிக்கு ஒதுக்கிக்கொண்டு அப்பணியை முடித்திருக்கிறார், இயக்குநர் ராஜேஷ்.
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தன. அதனை எம்.ராஜேஷ் மறுத்தார். தற்போது நயன்தாரா நடிப்பது உறுதி என்று பேசப்படுகிறது. ஏற்கனவே ராஜேஷின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் நடித்த அனுபவத்திலும், சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருப்பதாலும் நயன்தாரா நோ சொல்லாமல் இப்படத்தினை டிக் அடிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT