Last Updated : 16 Jan, 2018 10:36 AM

 

Published : 16 Jan 2018 10:36 AM
Last Updated : 16 Jan 2018 10:36 AM

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சீதக்காதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இணையான பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 'சீதக்காதி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 25-வது படமாக 'சீதக்காதி' அமைந்திருக்கிறது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கிறது.

பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஒரு கதாபாத்திரத்திற்காக அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள 'ஒரு பக்க கதை' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவுற்று, சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x