Published : 18 Jan 2018 08:27 PM
Last Updated : 18 Jan 2018 08:27 PM

சமுத்திரக்கனியுடன் சண்டை போட்ட அனுபவம்: உதயநிதி பகிர்வு

சமுத்திரக்கனியுடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம் என்று உதயநிதி பேசினார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி, சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நிமிர்'. ஜனவரி 26-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் உதயநிதி, நமீதா பிரமோத், பார்வதி நாயர், கருணாகரன், ஜார்ஜ், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் உதயநிதி பேசுகையில், ''படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். 'நிமிர்' படத்தில் மகேந்திரன் சாருடன் இணைந்து நடித்தது எனக்குப் பெருமை. 'தெறி' படத்திற்குப் பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார்.

சமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் சார் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்தப் படத்தில் தான்.

கருணாகரனுக்கும் எனக்கும்தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குநர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரக்கனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார்.

நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீதான் நடிக்கிறாய் என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்துவிட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன் என்று அவரிடம் சொன்னேன்'' என்றார் உதயநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x