Published : 18 Jan 2018 04:29 PM
Last Updated : 18 Jan 2018 04:29 PM

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் கால பைரவா

ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'கால பைரவா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கம் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் நடிக்கிறார்.

'காஞ்சனா 2' படத்திற்குப் பிறகு தற்போது 'காஞ்சனா 3' படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் 'கால பைரவா' படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார். இப்படத்தை இயக்குவதோடு லாரன்ஸ் நாயகனாகவும் நடிக்கிறார். இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே 'கால பைரவா' படத்தின் நாயகி, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை லாரன்ஸ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x