Last Updated : 15 Jan, 2018 12:52 PM

 

Published : 15 Jan 2018 12:52 PM
Last Updated : 15 Jan 2018 12:52 PM

Mr. சந்திரமெளலி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr. சந்திரமெளலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

திரு இயக்கத்தில் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'Mr. சந்திரமெளலி' என் தலைப்பிட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் உள்ளிட்ட பலர் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக சாம், எடிட்டராக சுரேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை குஷ்பு, விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்கள்.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x