Published : 17 Jan 2018 03:02 PM
Last Updated : 17 Jan 2018 03:02 PM

ஸ்கெட்ச் படத்தில் சூரியின் காட்சிகளைக் குறைத்தது ஏன்?- விக்ரம் விளக்கம்

'ஸ்கெட்ச்' படத்தில் வேகமாகப் போற திரைக்கதையில் சூரியோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான்தான் என்று விக்ரம் கூறியுள்ளார்.

விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான 'ஸ்கெட்ச்' படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் விக்ரம் பேசுகையில், '''ஸ்கெட்ச்' படத்துக்கு என் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு ரசிகரும் அவங்க வீட்ல ஒருத்தரா என்னைக் கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.

கடந்த வருஷம் என் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. என் அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நான் எதிர்பார்த்தவிட பெரிசா இருந்தது. அதுக்கு எவ்வோ நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும்.

'ஸ்கெட்ச்' படத்தில் சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான்தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாச்சித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்கத் தயார். அல்லது இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்க வேண்டும். வேகமாகப் போற திரைக்கதையில் சூரியோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான்தான். அதுக்காக சூரிகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் விக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x