Last Updated : 20 Nov, 2017 09:25 PM

 

Published : 20 Nov 2017 09:25 PM
Last Updated : 20 Nov 2017 09:25 PM

நவம்பர் 24-ல் வெளியாகிறது டிக்:டிக்:டிக் ட்ரெய்லர்

ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

'டிக்:டிக்:டிக்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க விண்வெளியை மையப்படுத்தி வரும் த்ரில்லர் என்பதால் பல்வேறு இடங்களில் கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இதன் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டிக்:டிக்:டிக்' படத்தில்ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து அதற்குள் நடத்தி இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x