Last Updated : 26 Oct, 2017 02:18 PM

 

Published : 26 Oct 2017 02:18 PM
Last Updated : 26 Oct 2017 02:18 PM

நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும்: அரவிந்த்சாமி

நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அரவிந்த்சாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்கான ஆயுத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் குறித்து அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இறுதியாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டேன். நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

நீட் விவாதங்கள் ஒருபுறம் தொடரட்டும். அதேவேளையில் நீட் தேர்வு இப்போதைக்கு கட்டாயம் என்ற சூழல் இருப்பதால் இத்தகைய பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

அரியலூர் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. பிளஸ் 2 தேர்வில் இவர் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் மனமுடைந்துபோன அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x