‘மாவீரன்’ டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்

‘மாவீரன்’ டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14 அன்று திரைக்கு வர உள்ள நிலையில், படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in