Last Updated : 08 Oct, 2017 05:27 PM

 

Published : 08 Oct 2017 05:27 PM
Last Updated : 08 Oct 2017 05:27 PM

ப்ரியதர்ஷனின் நிமிர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நிமிர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா வெளியிட்டார்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கு 'நிமிர்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.

இப்படம் டிசம்பர் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு தீர்மானித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x