கேரள திரைப்பட அகாடமி தலை​வர் பதவியி​ல் இருந்து ரசூல் பூக்​குட்டி வில​கல்

பிரபல ஒலி வடிவ​மைப்​பாளர் ரசூல் பூக்​குட்டி

பிரபல ஒலி வடிவ​மைப்​பாளர் ரசூல் பூக்​குட்டி

Updated on
1 min read

கேரள மாநில திரைப்பட அகாட​மி​யின் தலை​வர் பதவியி​லிருந்து ஆஸ்​கர் விருது பெற்ற பிரபல ஒலி வடிவ​மைப்​பாளர், ரசூல் பூக்​குட்டி வில​கி​யுள்​ளார்.

கடந்த ஆண்டு அக்​டோபரில் ரசூல் பூக்​குட்டி இந்​தப் பதவிக்கு நியமிக்​கப்​பட்​டார். இயக்​குநர் ரஞ்​சித் மற்​றும் நடிகர் பிரேம் குமார் ஆகியோ​ருக்​குப் பிறகு இவர் இப்​பொறுப்பை ஏற்​றிருந்​தார். இந்​நிலை​யில் கேரளா​வில் ஏற்​பட்​டுள்ள ஆட்சி மாற்​றத்​தைத் தொடர்ந்​து, அவர் தனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். அரசின் தலை​மைச் செய​லா​ளரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்​பித்​துள்​ளார்.

ரசூல் பூக்​குட்​டி​யின் பதவி வில​கலைத் தொடர்ந்​து, புதிய தலை​வரைத் தேர்ந்​தெடுப்​ப​தற்​கான ஆலோ​சனை​கள் தொடங்கியுள்ளன. இதில் மூத்த நடிகர் ஜகதீஷ், நடிகர் சலீம்குமார், இயக்​குநர் தீபு கருணாகரன், பிரேம் குமார் ஆகியோரின் பெயர்​கள் பரிசீலனை​யில்​ உள்​ள​தாகக்​ கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p><em>பிரபல ஒலி வடிவ​மைப்​பாளர் ரசூல் பூக்​குட்டி</em></p></div>
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in