Published : 08 May 2023 10:03 AM
Last Updated : 08 May 2023 10:03 AM

‘‘நாக சைதன்யாவுக்கு சிறந்த தமிழ் அறிமுகமாக இருக்கும்!’’ - வெங்கட் பிரபு

நாக சைதன்யா மற்றும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘கஸ்டடி’ மூலம் தமிழுக்கு வருகிறார், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா. வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். அரவிந்த்சாமி, சரத்குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசினோம்.

நாக சைதன்யா தெலுங்குல முன்னணி ஹீரோ. அவரை தமிழ்ல அறிமுகப்படுத்தறீங்க...

தமிழ்ல அவருக்குச் சிறப்பான அறிமுகமா இந்தப் படம் இருக்கும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப வசதியா இருந்தது. அழகா தமிழ்ப் பேசினார். அதனால வேலை வாங்குறது எளிமையா இருந்துச்சு. எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு மட்டுமே பேசுகிற ஹீரோவா இருந்தா கஷ்டமா இருந்திருக்கும். தமிழ் பேசினதால புரிஞ்சுகிட்டு வேலை பார்க்கிறது நல்லா இருந்தது. அவர் சிறந்த நடிகர். ரொம்ப
அருமையா நடிச்சிருக்கார். அவர் ஜோடியா
கீர்த்தி ஷெட்டி நடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் அழுத்தமான கேரக்டர்தான்.

முதல்ல 'சிவா'ன்னு தலைப்பு வச்சீங்களாமே?

ஏன்னா அது கேரக்டர் பெயர். இதே தலைப்புல நாகர்ஜுனா சார் நடிச்சு தெலுங்குல சூப்பர் ஹிட் படம் வந்துச்சு. (தமிழில் உதயம்) . அதனால அந்த பேர் வேண்டாம், தமிழ், தெலுங்குக்கு பொதுவா வேற தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சோம். கதைக்கும் சரியா இருந்ததால, 'கஸ்டடி'ன்னு வச்சோம். யாரை யார் கஸ்டடியில வச்சிருக்காங்கன்னு கதை போகும்.

ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான ஜானர்ல பண்ணுவீங்க...இது என்ன ஜானர்?

இதுவும் வித்தியாசமான ஜானர் படம்தான். வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட ரெண்டு பேர் டிராவல் பண்ணும்போது நடக்கிற விஷயங்களை வச்சு சில ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருக்கு. ‘மிட்நைட் ரன்' , ‘டியூ டேட்' மாதிரி ரோடு காமெடி ஜானர்ல இதுவும் இருக்கும். நம்ம ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு சுவாரசியமா பண்ண முடியுமோ, அப்படி பண்ணியிருக்கோம். தெலுங்குலயும் வர்றதால ஓவர் ஆக்‌ஷனா இருக்குமோன்னு நினைக்க வேண்டாம். இது ஆக்‌ஷன் படம்தான். ஆனா, யதார்த்தமான ஆக்‌ஷனா இருக்கும்.

48 மணி நேரத்துல நடக்கும் கதைன்னு சொன்னாங்களே...

ஆமா. சிவாங்கற ஒரு கான்ஸ்டபிளோட கதைதான் படம். சின்னமனூர்ல வேலை பார்க்கிற ஒரு கான்ஸ்டபிள், வில்லனை சாக விடாம பாதுகாக்கறது படம். அதுக்கு அவர் என்ன பண்றார். வில்லன் ஏன் சாகக் கூடாதுங்கறது திரைக்கதையில இருக்கும். இதை தமிழ், தெலுங்கு படமா பண்ணியிருந்தாலும் தமிழ் நடிகர்கள்தான் அதிகம் நடிச்சிருக்காங்க. நகைச்சுவைக்கு மட்டும் தமிழுக்கு பிரேம்ஜி, தெலுங்குக்கு வெண்ணிலா கிஷோர்.

உங்க பெரியப்பாவோட (இளையராஜா) இதுல ஒர்க் பண்ணியிருக்கீங்க…

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவும் பெரியப்பாவும் இசை அமைச்சிருக்காங்க. ராஜா சார் பெயர் என் படத்துல வரணுங்கறது என் நீண்ட நாள் ஆசை. அது இதுல நிறைவேறியிருக்கு. வழக்கமா, யுவன் கிட்ட பாட்டு கேட்கும்போது பெரியப்பா பாடலை ரெபரன்ஸ் சொல்லி, இந்த மாதிரி வேணும்னு கேட்பேன். ஆனா, பெரியப்பா கிட்ட அப்படி கேட்டா, கோபம் வரும்னு சொல்லிருக்காங்க. அதனால யுவன்கிட்ட சொல்லியே பாடலை வாங்கிட்டேன். பின்னணி இசையும் மிரட்டலா இருக்கும்.

உங்க இயக்கத்துல அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாமே இது?

உண்மைதான். அந்தளவுக்கு இந்தக் கதைமேல் நம்பிக்கை வச்ச தயாரிப்பாளர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அதோட இது எனக்கு முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவுக்கு முதல் தமிழ் படம். அவர்ட்டதான் முதல்ல கதை சொன்னேன். பிடிச்சுப் போச்சு. என் முதல் தேர்வும் அவராகத்தான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளர்கிட்ட கதை சொன்னேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x