பவன் கல்யாணுடன் இணையும் படம் ரீமேக்கா? - இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் மறுப்பு

பவன் கல்யாணுடன் இணையும் படம் ரீமேக்கா? - இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் மறுப்பு
Updated on
1 min read

பவன் கல்யாணுடன் இணையும் படம் எந்தவொரு படத்தின் ரீமேக்கும் அல்ல என்று இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்திலிருந்து மீண்டும் திரையுலக களத்துக்குத் திரும்பியுள்ளார் பவன் கல்யாண். முதலாவதாக 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போனி கபூருடன் இணைந்து தில் ராஜு இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் பிரம்மாண்ட அரங்குகளில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் இந்தப் படம் தயாராவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, மீண்டும் 'கபார் சிங்' இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பவன் கல்யாண். இந்தப் படத்தை 'கபார் சிங்' படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

மீண்டும் பவன் கல்யாண் - ஹரிஷ் ஷங்கர் இணையும் படம் ரீமேக் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு ஹரிஷ் ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த முறை தனது நேரடிக் கதையில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக ஹரிஷ் ஷங்கர் கூறியுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in