வாரணாசியில் 20 நிமிட ராமாயணக் காட்சிகள்

வாரணாசியில் 20 நிமிட ராமாயணக் காட்சிகள்
Updated on
1 min read

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு, பிரி​யங்கா சோப்​ரா, பிருத்​வி​ராஜ் நடிக்​கும் திரைப்​படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்​வெஞ்​சர் ஃபேன்​டஸி படமான இதன் கதையை ராஜமவுலி​யின் தந்​தை, விஜயேந்​திர பிர​சாத் எழு​தி​யுள்​ளார். இப்​படம், 2027ம் ஆண்டு ஏப்.7-ல் வெளி​யாகிறது.

முக்​கிய​மான காட்​சிகள் கென்ய காடு​களில் படமாக்கப்பட்டுள்ளன. சர்​வ​தேச அளவில் இப்​படத்​தைக் கொண்டு செல்ல படக்​குழு முடிவு செய்​துள்​ளது. இதனால் அதிக பட்​ஜெட்​டில் இப்​படம் உரு​வாகி வரு​கிறது. மெக்​சிகோ​வில் நடைபெற்ற காமிக் கான் விழா​வில் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் இப்​படக்​குழு சார்​பில் கலந்​து​கொண்ட தயாரிப்​பாளர் எஸ்​.எஸ்​.​கார்த்தி​கே​யா, இந்​திய இதிகாசங்​களுக்​கும் லத்​தீன் அமெரிக்​கக் கலாச்​சா​ரத்​துக்​கும் உள்ள ஒற்​றுமை குறித்து விளக்​கம் அளித்தார்.

“இந்​தி​யா​வில் ராமாயணம் மற்​றும் மகா ​பாரதம் போன்ற இதிகாசங்​களி​ல் இருந்து நாங்​கள் பெரு​மளவு உத்​வேகம் பெறுகிறோம். ‘வாரணாசி’ படத்​தில் சுமார் 20 நிமிடம் நீள​முள்ள ரா​மாயணக்​ காட்​சிகள்​ பிரம்​மாண்​ட​மாக இடம்​பெற்​றுள்​ளன” என்றும்​ அவர்​ தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் 20 நிமிட ராமாயணக் காட்சிகள்
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in