

நடிகர் டொனால்ட் கிப்
பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் தனது 71-வது வயதில் காலமானார்.
1988-ம் ஆண்டு வெளியான ‘பிளட்ஸ்போர்ட்’ என்ற தற்காப்பு கலை படம் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் டொனால்ட் கிப். இதில் இவரது நகைச்சுவை கலந்த முரட்டுத் தனமான நடிப்பு வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘ரிவெஞ்ச் ஆஃப் தி நெர்ட்ஸ்’, ‘மேஜிக் கிட் 2’, ‘ஹை வோல்டேஜ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். ஆறடி 4 அங்குல உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட அவர், திரையில் தனது அசாத்தியமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.