

நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத், கழுத்தில் தாலியுடன் காரில் ஏறி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.
இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா வீடியோவை ஒன்றைப் பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பல்வேறு பகுதிகளில், படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். நான் கதாபாத்திரத்துக்கான மேக்கப்பில் இருந்தபோது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதைப் பார்த்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நடிகை, பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் பல்வேறு தோற்றத்தில் இருப்பது வழக்கம். திருமணமான பெண்ணின் தோற்றத்தில் இருப்பதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நான் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கங்கனா ‘குயின்’ படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் இருந்து அவர் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அது வைரலானது.