‘ராமாயணா பாகம் 1’-ன் தலைப்பு அறிவிப்பு

‘ராமாயணா பாகம் 1’-ன் தலைப்பு அறிவிப்பு
Updated on: 
1 min read

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராமாயணா’ படத்தின் முதலாம் பாகத்துக்கு ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்த நாளான செப்டம்பர் 28 அன்று படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது.

அந்தப் பதிவில், ‘மனித குலத்தின் மாபெரும் கதை உயிர் பெறுகிறது. ‘தி ஓடிஸி’ மற்றும் ‘டூன்’ படங்களின் விஷுவல் கலைஞர்களிடம் இருந்து வருகிறது ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இத வரை பார்த்திராத 3டி சினிமா அனுபவம், பிரத்யேக திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ்-களில் உலகெங்கும் நவம்பர் 6 அன்று வெளியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரண்டு  நாட்களுக்கு முன்பு படத்தில் ராவணனாக நடிக்​கும் யஷ், ரன்​பீர் கபூர், சாய் பல்​ல​வி, ரவி துபே ஆகியோரின் புதிய போஸ்​டர்​களை படக்​குழு வெளியிட்டு இருந்தது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்தது.

ரன்​பீர் கபூர் ராம​ராக​வும், சாய் பல்​லவி சீதை​யாக​வும், யஷ் ராவணனாகவும் நடித்​துள்ள ‘ரா​மாயணா 1’ படத்தை நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்​ளார். ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளி​யாக உள்ள இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகிறது.

இதன் முதல் பாகமான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ இந்த ஆண்டு தீபாவளிக்​கு நவம்பர் 6 அன்றும், 2-வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது.

‘ராமாயணா பாகம் 1’-ன் தலைப்பு அறிவிப்பு
‘தி பாரடைஸ்’ எதிர்வினைகள் உணர்த்தியது என்ன? - மனம் திறந்த நானி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in