இந்​தி​யில் படம் தயாரிக்​கிறார் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ்

இந்​தி​யில் படம் தயாரிக்​கிறார் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ்
Updated on
1 min read

இயக்​குநர் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், தான் இயக்​கிய ‘கஜினி’ படத்தை ஆமிர்​கான் நடிப்​பில் இந்​தி​யில் ரீமேக் செய்​தார்.

இப்​படம் வெற்றி பெற்​றதை அடுத்து அக் ஷய்​கு​மார் நடிப்​பில் ‘ஹாலிடே’, சோனாக் ஷி சின்ஹா நடித்த ‘அகி​ரா’, சல்​மான் கான் நடிப்​பில் ‘சிக்​கந்​தர்’ ஆகிய படங்​களை இந்​தி​யில் இயக்​கி​னார். இந்​நிலை​யில் அவரிடம் இணை இயக்​குந​ராக பணி​யாற்​றிய பாலாஜி கணேஷ் இயக்​கும் இந்​திப் படத்தை அவர் தயாரிக்க இருக்​கிறார்.

பாலாஜி கணேஷ், சன்னி தியோல் நடிக்​கும் சஸ்​பென்ஸ் த்ரில்​லர் படத்தை இயக்க இருக்​கிறார். இதை ரிதேஷ் சித்​வக​னி, பர்​ஹான் அக்​தர் ஆகியோ​ருடன் இணைந்து ஏ.ஆர்​.​முரு​க​தாஸும் தயாரிக்கிறார். இது முற்​றி​லும் புதிய கதைக்​ களம் என்​றும் சன்னி தியோல் இது​வரை நடிக்​காத கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்பதாக​வும் கூறப்​படு​கிறது.

இப்​படம் தொடர்​பாக அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளியாக இருக்​கிறது. சிவ​கார்த்​தி​கேயன் நடிப்​பில் ‘மத​ராஸி’ படத்தை இயக்கி இருந்​தார் இயக்​குநர் முரு​க​தாஸ். இப்​படம் எதிர்பார்த்த வெற்​றியை பெறவில்​லை.

இந்​தி​யில் படம் தயாரிக்​கிறார் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in