இந்தி சினிமா வரலாற்றில் முதல் முறை: ஷாருக்கானின் ‘ஜவான்’ முதல்நாளில் ரூ.129 கோடி வசூல் என அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தி சினிமா வரலாற்றில் முதல் முறை: ஷாருக்கானின் ‘ஜவான்’ முதல்நாளில் ரூ.129 கோடி வசூல் என அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி சினிமா வரலாற்றில் முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.129.6 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக் நடித்து வெளியான ‘பதான்’ படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்திருந்த நிலையில் அப்படத்தின் முதல்நாள் வசூலை ‘ஜவான்’ முறியடித்துள்ளது. மேலும் இதுவரை வெளியான அனைத்து பாலிவுட் படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in