Published : 15 Dec 2022 12:25 AM
Last Updated : 15 Dec 2022 12:25 AM

2022: ஐஎம்டிபி பிரபல திரைப்படங்கள் பட்டியலில் தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம்

2022 இந்தி சினிமாவிற்கு சிறந்த ஆண்டு அல்ல, ஆனால் இந்திய சினிமாவிற்கு, இது நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டிய ஆண்டாகும். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் அடங்கிய தென்னிந்திய திரைப்படங்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் எதிரொலி, ஐஎம்டிபி பட்டியலில் வெளிப்பட்டுள்ளது.

திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து மக்கள் தங்கள் ரேட்டிங்கை அளிக்கும் வகையிலான வலைதளம் ஐஎம்டிபி. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான டாப் 10 இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐஎம்டிபி. இதில் 8 இடங்களை தென்னிந்திய படங்களே பிடித்துள்ளன.

இரண்டே இரண்டு பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அவை, தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் மேஜர். காஷ்மீர் பைல்ஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தையும், மேஜர் படம் 7ம் இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பிடித்துள்ளது.

3ம் இடத்தில் கேஜிஎப் இரண்டாம் பாகம், 4ம் இடத்தில் கமலின் விக்ரம், 5ம் இடத்தில் காந்தாரா, 6ம் இடத்தில் ராக்கெட்ரி தி நம்பி விளைவு, 8ம் இடத்தில் சீதா ராமம், 9ம் இடத்தில் பொன்னியின் செல்வன், 10ம் இடத்தில் 777 சார்லி படங்கள் பிடித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x