Published : 03 Jun 2022 02:24 PM
Last Updated : 03 Jun 2022 02:24 PM

சில பல கூஸ்பம்ஸ் மொமன்ட்ஸ்... வேற லெவல் சம்பவம்... - நெட்டிசன்ஸ் பார்வையில் ‘விக்ரம்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ‘விக்ரம்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் ரசித்த நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து...

மருத்துவ மைனர்:

MUST WATCH...

இன்னும் Gun Sound கேட்டுட்டே இருக்கு.

Family Audienceலாம் ஒண்ணும் வேணாம்... மாஸா ஒரு படம் பண்ணலாம்னு இறங்கி அடிச்சுட்டாப்ல லோகேஷ்...

கமல், பஹத் & விஜய் சேதுபதி.. ப்பா.. மூணு பேரும் வேற லெவல் Acting

விக்ரம்... விக்ரம்... விக்ரம்...

Priya:

கமல் ரசிகன் சொல்லி கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு படத்தை கொடுத்து இன்னிக்கி வரைக்கும் கொண்டாட வச்ச மாதிரி விக்ரம் காலத்துக்கும் நின்னு பேசும்.

Rage Thug:

லோகேஷ் இப்டி அடுத்தடுத்த படங்கள connect பண்ணுனா OTT-ல லோகேஷ் படத்தை வாங்குறதுக்குன்னே தனி demand create ஆவும், நல்லா ரேட் பேசலாம் போல.

தமிழ் வெல்லும்:

டைரக்டருக்கு சுதந்திரம் குடுத்தாதான் கேஜிஎஃப், வலிமை, விக்ரம் மாதிரியான நல்ல படைப்புகள் கிடைக்கும்.

RJ JEEVA:

அதாவது கைதி 2 தான் விக்ரம்.

RAJESHKUMAR JEGATHESAN:

பழைய விக்ரம் போய் புது விக்ரம் வந்து கைதியை கோர்த்து விட்டு வேற லெவல் சம்பவம்.

Why so serious?

ஃபேன் பாய் சம்பவம்ன்னா 90% ஸ்க்ரீன ரொப்ப வேண்டியதில்லை... இப்படி பண்ணனும்.

The Common Man:

#Vikram Slow and steady first half... இரண்டாம் பாதிக்கான stage setting தான் முதல் பாதி... நடுவுல சில செண்டிமெண்ட் speed breakers... Interval block was the saviour... Brought back the theater to cheers... Half half belongs to Fahat & விசே... கமல் வர்றதே குறைவு தான்... முதல்பாதியின் குறையை ரெண்டாம் பாதில மொத்தமா ஈடு கட்டிட்டாங்க... Racy and out and out Kamal show... செம பரபர லோகேஷ் story telling... சில பல கூஸ்பம்ஸ் மொமன்ட்ஸ்... Climax is Sure shot Blockbuster...

PrakashMahadev:

என்ன கதையாவோ படமாவோ ஒரு கம்ப்ளீட் இல்லை. ஆனா பார்க்கிறப்ப சீன்ஸா நல்லா இருக்கு

ஏகப்பட்ட லாஜிக் குழப்பங்களோட படம் இருக்கு. ஒரு ஐடியாவை இழுத்து ............ படமா பண்ணி இருக்காங்க. அதுலயும் ஏகப்பட்ட டைம்லைன் மிஸ்டேக்குகள்.

Random Guy:

லோகி சம்பவம்..!

திருட்டுகுமரன்:

செகண்ட் ஆஃப் பெட்டர் தேன் பர்ஸ்ட் ஆஃப். பக்கா லோகேஷ் மெட்டிரியல். வொர்த்..!

வாசிக்க > முதல் பார்வை | விக்ரம் - நடிப்பு யுத்தத்துடன் ஆக்‌ஷன் தெறிக்கும் திரை அனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x