Published : 25 Feb 2022 11:19 AM
Last Updated : 25 Feb 2022 11:19 AM

‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’ முதல் நாள் வசூலை முறியடித்த வலிமை

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் காலை 4 மணிக்கே ‘வலிமை’ படத்தின் திரையிடப்பட்டது. ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர்.

கரோனாவுக்கு முன்பிருந்தே ரசிகர்கள் இப்படத்துக்காக காத்திருந்ததால் ‘வலிமை’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டுமே ஏறக்குறைய 1000+ திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னையில் மட்டுமே ரூ.1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் ‘மாஸ்டர்’ (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x