Published : 02 Aug 2021 21:51 pm

Updated : 02 Aug 2021 21:54 pm

 

Published : 02 Aug 2021 09:51 PM
Last Updated : 02 Aug 2021 09:54 PM

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்: லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்?

keerthy-suresh-in-vedhalam-telugu-remake

ஹைதராபாத்

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்' 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.


இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியாக 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. மெஹர் ரமேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. இதில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'வேதாளம்' படத்தில் அஜித்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்திருப்பார். அவருடைய கதாபாத்திரத்தில் தெலுங்கில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பிற்கான தேதிகள் முடிவானவுடன், அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தினை அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.


தவறவிடாதீர்!

வேதாளம்அஜித்சிவாசிரஞ்சீவிமெஹர் ரமேஷ்லட்சுமி மேனன்கீர்த்தி சுரேஷ்ஸ்ருதிஹாசன்ராம்சரண்வேதாளம் தெலுங்கு ரீமேக்One minute newsVedhalamVedalamAjithSivaChiranjeeviMeher rameshLakshmi menonKeerthy sureshShruthi haasanRamcharanVedalam telugu remake

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x