Published : 02 Aug 2021 07:40 PM
Last Updated : 02 Aug 2021 07:40 PM
புனீத் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னடத்தில் 'லூசியா', 'யு-டர்ன்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் கன்னட முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார் நடிக்கும் திரைப்படம் 'த்வித்வா'. அத்தனை கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.
'கேஜிஎப்' திரைப்படத்தைத் தயாரிக்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. உளவியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக இது உருவாகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
The leading lady of #Dvitva is here.
— Hombale Films (@hombalefilms) August 2, 2021
We welcome the talented @trishtrashers on board.@PuneethRajkumar @VKiragandur @hombalefilms@Pawanfilms @HombaleGroup @DvitvaMovie pic.twitter.com/waNkU7FY92
Sign up to receive our newsletter in your inbox every day!