Published : 03 May 2021 08:55 am

Updated : 03 May 2021 09:39 am

 

Published : 03 May 2021 08:55 AM
Last Updated : 03 May 2021 09:39 AM

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய வாழ்த்துகள் - திமுக கூட்டணி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்

ar-rahman-congratulates-dmk-alliance

தமிழக சட்டப்பேரவை தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.


இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


தவறவிடாதீர்!

AR rahmanDMK allianceஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்திமுக கூட்டணி வெற்றிஸ்டாலின்திமுகதேர்தல் முடிவுகள் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x