Published : 01 Mar 2021 16:33 pm

Updated : 01 Mar 2021 21:32 pm

 

Published : 01 Mar 2021 04:33 PM
Last Updated : 01 Mar 2021 09:32 PM

ஷாரூக்கான் - ஆலியா பட் இணைந்து தயாரிக்கும் டார்லிங்க்ஸ்

darlings-movie-announced

மும்பை

ஷாரூக்கான் மற்றும் ஆலியா பட் இணைந்து 'டார்லிங்க்ஸ்' என்னும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

இந்தி திரையுலகினி முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக்கான், தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தை அவருடைய மனைவி கெளரி கான் நிர்வாகித்து வருகிறார். தற்போது ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளது.

'டார்லிங்க்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜாஸ்மீட் கே ரீன் இயக்கவுள்ளார். இதில் ஆலியா பட், ஷிஃபலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேதீவ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். டார்க் காமெடி பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது.

'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'டார்லிங்க்ஸ்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆலியா பட். இது அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படமாகும். தொடர்ச்சியாக இதர நடிகர்கள் நடிக்கும் படத்தையும் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் ஆலியா பட்.


தவறவிடாதீர்!

DarlingsDarlings announcedShah rukh khanAlia bhattOne minute newsடார்லிங்க்ஸ்ஷாரூக் கான்ஆலியா பட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x