Published : 29 Jun 2020 02:13 PM
Last Updated : 29 Jun 2020 02:13 PM

‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottNetflix

ரவிகாந்த் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் கடந்த ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இதில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இந்துக் கடவுளான கிருஷ்ணரையும், ராதாவையும் தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் ‘#BoycottNetflix' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகைப் பயன்படுத்தி ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்தைத் தடை செய்யவேண்டும் எனவும், நெட்ஃப்ளிக்ஸை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல அனுஷ்கா சர்மா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘புல்புல்’ திரைப்படத்துக்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதிலும் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கும் #BoycottNetflix என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x