Published : 04 Nov 2019 04:43 PM
Last Updated : 04 Nov 2019 04:43 PM

படத்தயாரிப்பு திட்டத்தை ஒத்திவைத்த காஜல் அகர்வால்

புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, படங்கள் தயாரிக்கும் எண்ணத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனது கதாபாத்திரத்துக்காக பல்வேறு வர்மக் கலைகளைக் கற்று வருகிறார் காஜல்.

கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். இந்தப் படத்தில் காஜலுக்கு பிரத்யேக மேக்கப் டெஸ்ட் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே தனியாக படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க முடிவு செய்துள்ளார் காஜல் அகர்வால்.

இதற்காக பல்வேறு கதைகளைக் கேட்டுள்ளார். இதில் எதுவுமே திருப்தி தராததால், மீண்டும் 'இந்தியன் 2'-வில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தனக்குப் பிடித்த மாதிரி கதைகள் அமைந்தால் உடனே தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அறிவித்து, படத் தயாரிப்பில் இறங்கவும் முடிவு செய்துள்ளார் காஜல் அகர்வால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x