Published : 29 Oct 2019 10:24 AM
Last Updated : 29 Oct 2019 10:24 AM

நடிகர் மனோ கார் விபத்தில் காலமானார்

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார். அவருக்கு வயது 37

சன் டிவியில் தொகுப்பாளராகவும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் நடனக் கலைஞராகவும் பிரபலமானவர் மனோ. தொலைக்காட்சியில் பிரபலமானதால், சினிமா வாய்ப்புகள் வந்தது. அதனைத் தொடர்ந்து படங்களிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 'புழல்' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானார். படங்களில் நடித்துக் கொண்டே மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார் மனோ.

நேற்று (அக்டோபர் 28) தீபாவளியன்று மனைவி லிவியாவுடன் அம்பத்தூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவிலிருந்த மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மனோ மரணமடைந்தார். உயிருக்குப் போராடிய அவரது மனைவி லிவியாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனோ - லிவியா தம்பதியினருக்கு நெட்டேனியா என்ற 5 வயது மகள் இருக்கிறார்கள். மனோவின் மரணம் அவரது நண்பர்கள் வட்டாரத்திலும், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x