Published : 02 Oct 2014 12:52 PM
Last Updated : 02 Oct 2014 12:52 PM

ராஜ் ஜெயின் - இவரைத் தெரியுமா?

# பார்தி ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ரீடெய்ல், எப்.எம்.சி.ஜி. உள்ளிட்ட துறைகளில் 34 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர்.

# இதற்கு முன்பு, வால்மார்ட் இந்தியாவுக்கு தலைவராகவும், பார்தி வால்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். 2013 ஜூன் மாதம் பார்தி வால்மார்ட் நிறுவனத்திலிருந்து விலகினார்.

# அதன் பிறகு பார்தி நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர், கடந்த ஜனவரியில் பார்தி ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.

# 1980ம் ஆண்டு ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு வேர்ல்பூல் இந்தியாவில் பத்துவருடங்கள் பணிபுரிந்தார். வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொறுப்பும் வகித்தார்.

# 2006-ம் ஆண்டு வால்மார்ட் நிறுவனத்தின் சீன பிரிவில் வேலை பார்த்தவர் அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார்.

# டெல்லி இன்ஜினீயரிங் கல்லூரியில் இன்ஜினீயரிங்கும், கெல்லாக்ஸ் நிர்வாக கல்லூரியில் எக்ஸிகியூட்வ் எம்.பி.ஏ.வும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x