Published : 04 Mar 2024 10:08 PM
Last Updated : 04 Mar 2024 10:08 PM

சிறந்த படம் 'தனி ஒருவன்', சிறந்த நடிகர் மாதவன்... 2015-க்கான தமிழக அரசு விருதுகள்

சென்னை: 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘தனி ஒருவன்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மார்ச் 6ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார். திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பரிசு பெறும் 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர்,தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:

  • சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்
  • சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2
  • சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா
  • சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று
  • பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே
  • சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
  • சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)
  • சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
  • சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
  • சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
  • சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
  • சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)
  • சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
  • சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)
  • சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)
  • சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
  • சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),
  • சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)
  • சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)
  • சிறந்த ஒலிப்பதிவாளர்: 1) ஏ.எல்.துக்காராம் 2) ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
  • சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
  • சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)
  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)
  • சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)
  • சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
  • சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டர் நிஷேஸ் 2). பேபி வைஷ்ணவி (பசங்க 2)
  • சிறந்த பின்னணிக்குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)
  • சிறந்த பின்னணிக்குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014 – 2015

  • சிறந்த இயக்குநர்: கே.மோகன் குமார் (புர்ரா)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
  • சிறந்த ஒலிப்பதிவாளர்: வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
  • சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை)
  • சிறந்த படம் பதனிடுவர்: வி.சந்தோஷ்குமார் (கிளிக்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x