

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் திரைப்பட மற்றும் சின்னதிரை விருதுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த 'திரைப்பட மற்றும் சின்னத்திரை விருது' வழங்கும் விழா வரும் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்துக்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம், 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26,25,000 காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுப் பட்டியல்: