அடுத்த படத்துக்கு தயாரான லெஜெண்ட் சரவணன்

அடுத்த படத்துக்கு தயாரான லெஜெண்ட் சரவணன்
Updated on
1 min read

சென்னை: பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி இருந்தனர். ஊர்வசி ரவுதெலா, விவேக், பிரபு உட்பட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இதையடுத்து அவர் அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதளத்தில், அடுத்த படத்தின் பணி தொடங்கிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். கூடவே வெளிநாடுகளில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in